சனி, 16 நவம்பர், 2013

படித்ததிலிருந்து ........


வேண்டாம்.. விலகிவிடு!


வேண்டாம்.. விலகிவிடு!

மரணத்தின் வலிகூட மரத்துப்போன பிறகும் - 

உன்வார்த்தைகள் வலிக்கிறது..! 



வேண்டாம்.. விலகிவிடு!

காலங்கள் கடந்து காப்பியமாய்க் கிடக்க -

 காதல்முடிந்ததென்று நீயோமுற்றுப்புள்ளி இடுகிறாயே..!



வேண்டாம்.. விலகிவிடு!

கற்கள் கேட்கிறாயே நீ -

 இந்தக்காதல் கொண்ட கடைக் கவியிடம்சொற்கள் மட்டும்தானேசொந்தமாய் இருக்கின்றன!



வேண்டாம்.. விலகிவிடு!

யதார்த்தம் பேசுகிறாய் நீ - 

அது முடியாதவர்களின் முட்டாள் வியாக்கியானம்..!

யதார்த்தம் பார்த்தா காதலித்தோம்?

யதார்த்தம் பார்த்தா கொடுத்தாய் முதல் முத்தம்?

அதில் கலந்திருந்த சிறு வெட்கம் -

 இன்னும்எஞ்சியிருக்கும் வெப்பம்அது போதும் எனக்கு!



வேண்டாம்.. விலகிவிடு!

என்கவிதைகள் கசக்கிறதா உனக்கு? -

 சொல்மௌனம் பேசப் பழகிக்கொள்கிறேன்

என் கண்ணீர் கனக்கிறதா உனக்கு? -

 சொல்போலிப் புன்னகை பூசிக்கொள்கிறேன்

மரணம் கேட்கிறாயே நீ - 

மறந்தாயாநம் காதல் கதையில் காலனுக்கு இடமில்லை!

வேண்டாம்.. விலகிவிடு!


நீ வாழத்தொடங்கு

நான் வாழ்க்கையைத் தொடர்கிறேன்

வேண்டாம்.. விலகிவிடு!




http://subankan.blogspot.in/லிருந்து ........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக