தொழில்நுட்பம்

இன்டர்நெட் மோடத்தினை UNLOCK செய்வது எப்படி? 
நண்பர்களே...

நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone) Dongle தை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.
நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.
சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது?
முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.
இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும்.
இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்று
http://www.wintechmobiles.com/tools/huawei-code-calculator/ , உங்களுடைய DONGLEஇன் IMEIகொடுத்து CALCULATE கொடுக்கவும்.
இப்போது உங்களுடைய Dongle இற்குறிய Unlock Code கிடைக்கும்.
அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இற்குல் போடுங்கள்.
உங்களிடம் Unlock Code கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும்.

-----------------------------------------------------------


Notepad ஐப் பாவித்துஒரு Folder  Lock செய்வது எப்படி ?

நண்பர்களே..
ஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு Folder ஐ எவ்வாறு Lock செய்யலாம் என்று பார்ப்போம்
உதாரணமாக உங்களிடம் tamil என்ற folder இருக்குதெனில் அந்த folder lock செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்

·        முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.
ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
·        பின் அந்த Notepad lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.
·        பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்
ren tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} tamil
·        பின் அந்த Notepad key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.
இங்கு tamil என்பது நீங்கள் Lock செய்ய வேண்டிய Folder இன் பெயர் ஆகும். இனி குறிப்பிட்ட அந்த tamil என்ற போல்டெர் ஐ Lock செய்வதற்கு lock.bat என்ற file double click செய்தல் வேண்டும் .


Lock செய்த Folder ஐ மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற File double click செய்தல் வேண்டும்.


இதில் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் நீங்கள் folder Lock செய்யும் போது Lock செய்யும் Folder உம் lock.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அதே போல Unlock செய்யும் போது unlock செய்யும் Folder உம் key.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.


இனியென்ன அந்த key.bat என்ற வேறொரு Drive இல் சேமித்து விடுங்கள். அந்த File இல்லாமல் உங்கள் folder ஐ யாரும் திறக்க முடியாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக